கிழக்கு மாகாண பிரதிபிரதம செயலராக கடமைகளைப் பெறுப்பேற்றுள்ளார் நஸீர்

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) எம்.எம்.நஸீர் தனது கடமைகளை திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வழங்கப்பட்ட கடிதத்துக்கமைய பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கவால் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்ட கடிதத்துக்கமைய தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.மன்சூர், விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவண்டா, முதலமைச்சரின் செயலாளர் என்.மதிவண்ணன், ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் திருமதி ஆர்.யூ.ஜலீல், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.