சஹ்ரானுக்கு புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கலாம்! ஹரீஸ் எம்.பி. சந்தேகம்

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி சஹ்ரானுக்கு, புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புக்களும் அங்கீகாரமும் கிடைத்திருக்கலாம்’ எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

கல்முனையில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கார்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த தாக்குகளின் பின்னணியில் பெரிய சக்திகள் இருப்பதாக ஆரம்பம் முதலே கூறிவருகிறார். இந்த தாக்குகளில் முஸ்லிங்களும், கிறிஸ்தவர்களும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஜனாதிபதி எந்த பக்கசார்புமின்றி நடப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எந்த தகுதி, தராதரமுமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்டு ஜனாதிபதி நியமிக்கவுள்ள விசாரணைக்குழுவுக்கு மேலதிகமாக புலனாய்வு பிரிவின் குழுவொன்றும், சர்வதேச பொலிஸாரின் புலனாய்வு அறிக்கையும், சர்வதேச விசாரணையும் இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.