எரிபொருள்களளின் விலையை நாளாந்தம் அடுத்த வருடம் முதல் மாற்றத் திட்டமாம்! அமைச்சர் காஞ்சன கூறுகிறார்

எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்