சமாதான நீதிவானுக்கான நியமன கடிதங்கள் நுவரெலியாவில் வழங்கல்

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சிபாரிசு மூலமாக சமாதான நீதிவானுக்கான நியமனக் கடிதங்களை அண்மையில் நுவரெலிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவர் உரியவர்களுக்கு கையளித்தார்.

அதன்படி, ஹற்றன் வலயக் கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர்களான அருணாச்சலம் தமயந்தி, சிவபாலசுந்தரம் கலைவாணி, மருதை சிவஞானஜோதி, கொத்மலை வலயக்கல்வி பணிமனையின் உதவி பணிப்பாளர் துரைசாமி நடராஜா, பொகவந்தலாவ பெற்றோசோ தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் செபஸ்டியன் பாப்பு சந்தனம் விக்டர், கந்தப்பளை எதர்செட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் கிருஸ்ணசாமி பத்மாவதி, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் சிவபிரகாசம் சுகேஷ்வரன், மஸ்கெலிய பிரதேச சபையின் வருமான துறைப் பிரிவின் வரி வசூலிப்பாளர், வனத்தையா ஜோன் ஆகியோருக்கு சமாதான நீதவானுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பிரதேச இணைப்பாளரும், முன்னாள் அதிபருமான சு.மேகநாதன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்