லயன்ஸ் கழகங்களினால் மூக்குகண்ணாடி வழங்கல்

சுன்னாகம் லயன்ஸ் கழகம் மற்றும் கைதடி லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை சுன்னாகம், கந்தரோடை கற்பக்குணையில் உள்ள கலைமதி சனசமூக நிலைய மண்டபத்தில் லயன் மகாதேவா – பூமாதேவி ஞாபகார்த்தமாக இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்பட உள்ளது.

இலவசமாகக் கண் பரிசோதிக்கப்பட்டு, கண்ணாடி வழங்கும் இந்த நிகழ்வில் தேவையுடைய அனைவரும் வந்து பயன்பெறுமாறு லயன்ஸ் கழகத்தினர் கேட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.