உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்!

 

நூருல் ஹூதா உமர்

கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளூர்
பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு- கோறளைப்பற்று பிரதேச சபைக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி குணசேகரவின் ஆலோசனை, வழிகாட்டலின் கீழ், இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலித்தின் பங்கேற்புடன் பாசிக்குடா அமந்தா பீச் றிசோடில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் தவிசாளர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்குகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்