பொலிஸ் குடும்பங்களுக்கு உலருணவு பொதி வழங்கல்!

 

(பாறுக் ஷிஹான்)

கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட பொலிஸாரின் குடும்பங்களுக்கு பொலிஸ் திணைக்களத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றதுடன் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருள்களை வழங்கி வைத்தார்.

இதன் போது கடந்த கால யுத்தத்தின் போது உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட பொலிஸாரின் உறவினர்கள், அங்கவீனமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களின் நலன்கள் குறித்து ஆராயப்பட்டன.

இதன் போது கல்முனை தலைமையக பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் ,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகரும் சுற்றுச் சூழல் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஐயூப்,கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குமாரி, பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச்செயலாளரும் காணி மத்தியஸ்த சபை பிரதான மத்தியஸ்தருமான எம்.ஐ.எம் ஜிப்ரி (எல்.எல்.பி) மற்றும் ஆலோசனை குழுவின் உறுப்பினர்கள் பயனாளிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்