கியூபா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த கலந்துரையாடலில், மருத்துவம், சுகாதாரம், விளையாட்டுப் பயிற்சி மற்றும் தெங்குப் பயிற்செய்கை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதோடு இருநாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இருநாட்டுத் தலைவர்களும் உடன்பாடு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்