லிபிய வெள்ளப்பெருக்கில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்துக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ளார்.

கொழும்பிலுள்ள லிபிய தூதரகத்திற்கு விஜயம் செய்து லிபியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்