தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இரண்டாம் நாளாக நல்லூரில் அனுஷ்டிப்பு

‘தியாக தீபம்’ திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (16) நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவுத்தூபியடியில் இடம்பெற்றது.

இதன்போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர், இந்நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அடையாள உணவுத் தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.