கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ் தலைமையில் அக்கறைப்பற்றில் அஸ்ரப் நினைவு தின நிகழ்வு!

 

நூருல் ஹூதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 ஆவது வருட நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை அக்கறைப்பற்று எம்.எஸ்.மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கின் கேடயம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில், கிழக்கிலங்கை அனைத்துப் பள்ளிவாசல்கள் நிறுவனத்தின் தலைவர் ஏ.சீ.எம்.புஹாரி ஆகியோர் விசேட அதிதியாக கலந்து கொண்டு தலைவர் அஷ்ரபின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஸ்ரபின் வகிபாகம், தேசிய அரசியலில் அஷ்ரபின் சாதனைகள், முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்தவை தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினர்.

கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.சபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் ஆத்ம ஈடேற்றத்திற்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

விசேட துஆ பிரார்த்தனை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம். அப்துல் றாஸிக் நிகழ்த்தினார். அத்தோடு கிழக்கின் கேடயம் கடந்த காலங்களில் சாதித்த விடயங்களை கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான யூ.எல்.என்.ஹூதா விளக்கினார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், சுற்றாடல் திணைக்கள அம்பாறை மாவட்ட சிரேஸ்ட அதிகாரி எம்.ஐ.எம்.இசாக், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஓய்வுபெற்ற பொறியியலாளர் என்.ரி. சிராஜுதீன், அக்கறைப்பற்று உலமா சபையின் செயலாளர் மௌலவி எம்.ஐ.எம். ஹபீப், கிழக்கின் கேடயம் அமைப்பின் கள செயற்பாட்டாளர் சபூர் ஆதம், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்