மட்டக்களப்பு போதனாவில் 17 வயது யுவதி திடீர் சாவு!

 

மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், ‘தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளைப் பெற்று அருந்தி வந்த நிலையிலேயே எனது மகளுக்கு திடீரென காய்ச்சலும், வாந்தி நிலைமையும் ஏற்பட்டது. இதனையடுத்தே மகள் உயிரிழந்து விட்டார்’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிடமுடியும் என வைத்தியசாலைத் தரப்பு தெரிவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்