உத்திக பிரேமரத்ன எம்.பியின் கார் மீது துப்பாக்கிச் சூடு : விசாரணைகள் சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் தனிப்பட்ட கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது சில குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (17) இரவு 10.35 மணியளவில் குறித்த உறுப்பினரின் வீட்டுக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.