திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் குழப்பங்கள் ஏற்படுத்தாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு உத்தரவு பிறத்துள்ளது.

குறித்த ஊர்திப் பவனி வவுனியாவிற்கு வந்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை கவனத்தில் எடுத்த நீதிமன்றம், இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது.

அத்தோடு இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்