கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும்  செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில்  இன்று 8,35,000 ரூபாய்  பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கனடாவில் இருக்கும் பாடகரான செந்தில் குமரன் ‘நிவாரணம்‘ எனும் பெயரில்  இசை நிகழ்ச்சிகளை  தனது சொந்த செலவில் நடத்தி அதன் ஊடாகப்  பணத்தினைத்  திரட்டியே குறித்த வாழ்வாதார உதவிகளை  வழங்கி வருகின்றார்.

அத்துடன் இவர் கடந்த காலங்களில் 105 இதய சத்திர சிகிச்சைகளுக்கு  நிதிதிரட்டி உதவி வழங்கியுள்ளார் என்பதும் முல்லைத்தீவு, மல்லாவி வைத்தியசாலைகளுக்கு இரத்த மாற்று சுத்திகரிப்பு நிலையத்தினை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.