ஜீவன் பல விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார்!
மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அதற்காக அவர் பல விட்டுக்கொடுப்புகளை செய்து வருகின்றார்” என என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்துவருவதால் இதனை எமது பலவீனமாக கருத வேண்டாம், மக்களுக்காகவே அதனையும் செய்கின்றோம். ஏனெனில் எமது மலையக இளைஞர்களும் இன்று மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
ஆன்மீக நிலையங்கள், பாடசாலைகள் போன்ற முக்கிய – சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்ற இடங்களில் ஒருபோதும் அரசியல் நடத்தக்கூடாது. அவ்வாறான இடங்களில் இணைந்து செயற்பட்டு சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கு – அடுத்த தலைமுறைக்கு வழங்குவதற்கு அரசியல் தரப்புகள் முன்வர வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.












கருத்துக்களேதுமில்லை