தேர்தலுக்காக இனவாதத்தை பரப்புவதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருவதாக விசனம்
அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிக்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தும் வேளையில் தாக்கப்பட்ட சம்பவமானது இந்த நாடு இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை என்பதை உணர்த்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக இனவாதத்தை பரப்புவதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருவதாகவும் விசனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் மிகவும் அவதானமாகவும் விவேகத்துடன் செயற்படவேண்டும் எனவும் திட்டமிட்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை