முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அடக்குமுறை சம்பங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இனவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு இந்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.