சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டிருந்ததுடன் பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.ஏ அமீர் அலி, சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்