மன்னாரில் 30 மில்லியன் பெறுமதியான கொக்கெய்னுடன் சந்தேக நபர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு இராஜப்பு ஜோசப் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள பகுதியில் கொக்கெய்ன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (18) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 1 கிலோ 12 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது.

இந்த கொக்கெய்ன் தற்போது 30 மில்லியனுக்கும் (3 கோடி) அதிக சந்தை மதிப்பினை கொண்டது என கூறப்படுகிறது.

மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

கைதானவர் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த 34 வயதான நபர் ஆவார்.

இதனையடுத்து, சந்தேக நபரிடம் மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருளோடு சந்தேக நபர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்