களுத்துறை தெற்கு ரயில் நிலைய சுவரில் சிறுநீர் கழிக்க முயற்சி : தடுத்ததால் தாக்கப்பட்ட நிலைய அதிபரும் ஊழியர்களும்!

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தில் ஒரு குழுவினர் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்களை கற்களால் தாக்கி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ரயில் நிலைய பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் மதுபோதையில் வந்த இந்தக் குழுவினர் ரயில் நிலைய சுவரில் சிறுநீர் கழிக்க முற்பட்டபோது அதற்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே மோதலுக்கு காரணம்.

குறித்தக் குழுவினர் கற்களை வீசி மூன்று பூந்தொட்டிகள் மற்றும் பயணிகள் இருக்கையை சேதப்படுத்தியதாக ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்