உயிரிழந்துள்ள வர்த்தகர்களுக்கு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல்!

முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில்  உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று புதன்கிழமை  காலை நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், சட்டத்தரணி  எஸ்.தனஞ்சயன், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை  மூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.