முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே உலகசமாதான நிறுவனமும், ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து குறித்த நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர்.

சர்வமத தலைவர்களின்  ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் அனைத்து இனங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் நடன நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டிருந்தன.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்கள் 180 பேருக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களை மகிழ்விப்பதற்கான இராணுவத்தினரின் இசை நிகழ்வும் விருந்துபசாரமும் நடைபெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ,  முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் (நிர்வாகம்),புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ஜெயகாந் முல்லைத்தீவு இராணுவ பாதுகாப்பு தலைமையக பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜெயவர்த்தன  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்