சமூகசேவை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இடையில் அம்பாறை மாவட்டத்தில் விசேட கலந்துரையாடல்!

 

நூருல் ஹூதா உமர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் கீழும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இளங்குமுதன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை_ காரைதீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமூக சேவை திணைகளத்தின் உத்தியோகத்தர் மற்றும் 19 பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் 19 பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் பதிவு செய்யப்பட்டு செயற்பாட்டில் இல்லாத அமைப்புகளை அவர்களின் பதிவை மீள் பரிசோதனை செய்து அவ்வாறான அமைப்புக்களை வறிதாக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அம்பாறை மாவட்ட பதிவு செய்யப்பட்ட சமூக சேவைகள் அமைப்பு மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய சம்மேளனம் உருவாக்கப்பட இருப்பதாகவும் மேலும் இவ்வாறான சம்மேளனம் ஏற்கனவே மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் உருவாக்ப்பட்டு விட்டது. மேலும் தெரிவு செய்யப்பட இருக்கின்ற அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் பிறகு திருக்கோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் உள்ளடக்கிய சம்மேளன நிர்வாகிகளை வைத்து கிழக்கு மாகாணத்துக்குரிய சம்மேளனம் மிக விரைவில் உருவாக்கப்பட இருப்பதாகவும் பணிப்பாளரால் இந்நிகழ்வில் வைத்து கருத்துரைக்கப்பட்டது.

அதற்கமைய வருகை தந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை வைத்து அம்பாறை மாவட்டத்திற்குரிய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர்களாக 19 பிரதேச செயலகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தி 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்