சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் 2020 இல் நடைபெற்றது.

நீதிமன்ற தடையை மீறி அன்றைய தினம் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தார் என்ற குற்றச்சாட்டில் சிவாஜிலிங்கம் உரும்பிராய் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

2020 செப்ரெம்பர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றம் எச்சரித்து பிணையில் விடுதலை செய்திருந்தது.

இந்நிலையில் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்