மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எங்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது! பிள்ளையான் சபையில் போட்டுடைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் தமிழ்  மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும்  நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் பெற்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.