நுவரெலியா பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகள், சுகாதார வைத்திய சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மதியமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா பொது வைத்தியசாலை நுழைவாசலில் நடைபெற்றது.

தரம் குறைவான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்வதையும், வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துகள் தட்டுபாடு, வைத்தியர்கள் வெளி நாடுகளுக்கு செல்லுதல், வைத்தியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாமை உட்பட்ட வைத்தியசாலைகளில் நிலவும் பலகுறைப்பாடுகளை முன் வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.’

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.