முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைதண்டனை

சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அதில் பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கஹவத்த பொலிஸார், குறித்த காலப்பகுதியில் பிரதியமைச்சராக இருந்த பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்தநிலையில், அவரை கைதுசெய்ய வேண்டாமென கஹவத்தை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி லலித் ராஜமந்திரிக்கு அழுத்தம் கொடுத்ததாக சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்தே இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை, கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த குற்றத்திற்காக, சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.