கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினம் முன்னெடுப்பு
உலக சுற்றுலா தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சிறப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதனையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியக அதிகாரிகள் விசேட பரிசில்கள், இனிப்புகள் மற்றும் இலங்கை தேநீர் பானங்களை வழங்கி வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை