சூட்டு பயிற்சித் தளத்தில் வெடிப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விமானப்படைத் தளபதி

 

கல்பிட்டி பிரதேசத்தில் கந்தகுளி பகுதியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச் சூட்டு பயிற்சி தளத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு இரண்டு நிபுணர்கள் அனுப்பப்பட்டதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் காரணம் கண்டறியப்படவில்லை என்றும் இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.