பிள்ளையானின் உத்தரவாதத்தை ஏற்க மறுத்த பண்ணையாளர்கள்!

 

பண்ணையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தரவாதம் வழங்குவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த போதும் எமது நிலம் ஆக்கிரமிப்பு செய்வதுடன் எங்களது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிப்போர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பே நாம் எல்லோரும் மேச்சல் தரைக்கு செல்வோம். அதுவோம் அரச அதிகாரிகளே எங்களை அழைத்துச் செல்லவேண்டும் அதுவரை அங்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் இராஜங்க அமைச்சரிடம் பதில் தெரிவித்தனர்.

மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் தரை விடயமாக ஜனாதிபதியின் செயலாளர் மூலம் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு மகாவலி அதிகார சபையுடன் பேசியதையடுத்து அங்கிருப்பவர்களை வெகு விரைவாக வெளியேற்றுவது என்றும் பண்ணையாளர்களுக்கு வந்திருக்கின்ற நம்பிக்கையீனத்தை குறைப்பதற்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு அவ்விடத்தில் தற்காலிக பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சித்தாண்டியில் பண்ணையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்திற்கு பொருத்தமான தீர்வொன்றை பெற்று கொடுக்கும் வகையில் செவ்வாய்கிழமை மாலை பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் –

கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மக்களிடையே முரன்பாடுகள் ஏற்படாமல் தவிர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கால் நடைகளை குறித்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று இருசாராருக்கும் பிணக்குகள் ஏற்படாதவகையில் நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தான் மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக இருப்பதாலும் மக்கள் கனிசமான அளவு வாக்களித்துள்ளனர் என்ற அடிப்படையில் இவ்விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மக்களிடையே முரன்பாடுகள் ஏற்படாமல் தவீர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவாதம் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இவ்வியடத்தில் நம்பிக்கையிருந்தால் தங்களது போராட்டத்தை கைவிடுமாறும் இல்லையென்றால் தங்களது ஜனநாயக போராட்டத்தை தொடரமுடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போது பெரும்போக வேளான்மை செய்கைக்காக உழவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கால் நடைகளை அகற்றவேண்டிய தேவை உள்ளதாகவும் அதற்கு நீங்கள்தான உதவிபுரிய வேண்டும் என்று பண்ணையாளர்களால் கோரிகை விடுக்கப்பட்டது.

அத்துடன் அங்கு சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்வதுடன் எங்களது கால்நடைகளுக்கு தீங்கு விளைவிப்போர் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய பின்பே நாம் எல்லோரும் மேச்சல் தரைக்கு செல்வோம்.

அரச அதிகாரிகளே எங்களை அழைத்துச் செல்லவேண்டும் அதுவரை அங்கு செல்லமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் அமைச்சரிடம் பதில் தெரிவித்தனர்.

கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் புதன்கிழமையுடன் 13 ஆவது நாளாக சித்தாண்டியில் பால் பண்ணைக்கு முன்பாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.