225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்தால் போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கலாம்! சஜித் பிரேமதாஸ உறுதி

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்மதித்தால், மது, புகையிலை, சிகரெட் மற்றும் போதைப்பொருள் பாவனையில்லா நாட்டை உருவாக்க முடியுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ‘போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வி.ஐ.பி. வரப்பிரசாதங்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தில் இருந்து தங்கம் கொண்டு வந்த எம்.பிக்கு எதிராக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானம் கொண்டு வந்ததைப் போன்று,  போதைபொருள் பாவனையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஒன்றிணைய வேண்டும்.

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் உள்ளதைப் போன்று கடுமையான சட்ட நடவடிக்கைகளை  எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் தற்போதைய பாடசாலைக் கட்டமைப்பை ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் கடத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். –  என சஜித் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.