முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – ஜனாதிபதியின் மௌனம் குறித்து ஹர்சா கருத்து

குருந்தூர் மலை உத்தரவிற்காகம மிரட்டல்களை எதிர்கொண்டதால்  நீதிபதி ரீ சரவணராஜா பதவி விலகினார் என வெளியாகும் தகவல்களால் நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சில பிரிவினரின் மிரட்டல்கள் மன வருத்தமளிக்கின்றன இந்த விடயத்தில் ஜனாதிபதியின் மௌனம் எமது ஜனநாயகம் தொடர்பானது எனவும் ஹர்சா டி சில்வா  தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுபவர்கள் அவர்களிற்கு எதிரான அச்சுறுத்தல்; ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றது எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் அச்சமின்றி நீதியை வழங்குபவர்களை நாங்கள் பாதுகாக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பக்கச்சார்பற்ற விசாரணைக்கான குரல்களுடன் எங்களையும் இணைத்துக்கொள்ளும் நாங்கள் ஐக்கியப்பட்டு இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்போம் இலங்கையின் அடையாளத்தை தழுவுவோம் எனவும் ஹர்சா டி சில்வா பதிவிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்