நாட்டின் நீதித்துறையில் ஊழல்கள் காணப்படுகின்றன!
இலங்கையின் நீதித்துறையில் ஊழல்கள் அதிகரித்து வரும் நிலையில், முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற “ஒரு தேநீர் மொட்டுக் காட்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிபதி பதவி விலகியுள்ளமை சட்டத்துறையில் ஓர் வீழ்ச்சி. சட்டத்துறையை காப்பாற்ற நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்பு உள்ளது.
இலங்கையை ஓர் வங்குரோத்து நாடு என்றே உலக நாடுகள் அடையாளப்படுத்துகின்றன. சுமார் 1.37 இலட்சம் தொழிலாளர்களே தற்போது காணப்படுகின்றனர். எதிர்காலத்தில் தொழிலாளர் போராட்டங்கள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை மறைப்பதற்கு பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஊடகம் இல்லாமல் ஒழிக்கப்படும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. ஒன்லைன் சட்டங்கள் மறுதலிக்கப்படுகின்றன. தொழிற்சங்க எதிர்ப்பு சட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும்.
இவ்வாறான சட்டங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாட்டின் நீதிதுறையில் பல ஊழல்கள் காணப்படும் நிலையில் ஒரு நீதிபதி பதவி விலகியுள்ளார்.
இது சட்டத்துறையில் ஓர் வீழ்ச்சி. சட்டத்துறையை காப்பாற்ற நாடாளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்பு உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை