சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ; ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்  சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். இதனை தவறாக பயன்படுத்துவதன் காரணமாக இளைஞர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

குடும்ப பிணைப்புகளிலிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் ஊடாக மதங்களுக்கும் சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

எனவே, சமூக ஊடகங்கள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தினால், பிரச்சினைகளை உருவாக்கினால், அல்லது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை தோற்றுவித்தால் அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும்.

அரசாங்கத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கலாம். சமூக ஊடகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக இடம் ஒன்று இருக்க வேண்டும். அதுவே இந்த  சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.