சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் சிறுவர் தினம்
நூருல் ஹூதா உமர், யூ.கே. காலித்தீன்
சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் அதிபர் எம்.ஏ.அஸ்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்முனை வலயத்தின் உளவளத்துறை ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.சியாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுப்பொருள்களை வழங்கி வைத்தார்.
மேற்படி நிகழ்வில் பாடசாலை உதவி அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி குழு செயலாளர் எம்.ஜி. அஹத், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.கே. காலித்தீன் ஆகியோரோடு பாடசாலை நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
சாய்ந்தமருது கோட்டத்தில் இப்பாடசாலையில்தான் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரத்தியோக கல்வி நிலையமும் அதற்கான விஷேட கல்வி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களும் இருக்கின்றமை விஷேட அம்சமாகும்.
கருத்துக்களேதுமில்லை