ரயிலுடன் ஓட்டோ மோதியது

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி சென்ற ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 39 வயதுடைய அப்துல் ரஹ்மான் ரமிஸ் எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்