மதங்களுக்கிடையிலான உரிமை மறுப்பை தட்டிக்கேட்கும் உரிமைகள் ஏனைய நாடுகளின் எம்.பிக்கும் உள்ளதாம்! சாணக்கியன் வலியுறுத்து

டந்த சில நாட்களாக மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சர்வதேச குழுவினால் (IPPFORB – The International Panel of Parliamentarians for Freedom of Religion or Belief) நடத்தப்படும் செயல்திட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பங்கேற்றார்.

இதில் பல நாடுகளில் இருந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இது தொடர்பில் சாணக்கியன் கூறுகையில்,

எமது நாட்டில் மதங்களுக்கு இடையில் உரிமை மறுக்கப்படும்போது அதனை தட்டிக் கேட்கும் சில உரிமைகள் சர்வதேச ரீதியிலான ஏனைய நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உண்டு.

குறிப்பாக, தொல்பொருள் எனும் பெயரில் கூடுதலாக இந்துக்களின் உரிமை மறுக்கப்படுவது, மத தலைவர்களை கைது செய்வது, பௌத்த பிக்குகள் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத மற்றும் இனவாத கருத்துக்களை வெளியிடுவது, ICCPR – International Covenant on Civil and Political Rights என்னும் சட்டங்கள் இருந்தும் அந்த சட்டங்களை அமுல்படுத்தாமல் இருப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும், கடந்த கால மனித உரிமை மீறல்கள், ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் ஒரு சர்வதேச குழு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு இக்களம் எமக்கு பேருதவியாக இனிவரும் காலங்களில் இருக்கும்.

நாட்டின் தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்திட்டங்கள் மூலமே எமது நாட்டுக்கான அழுத்தங்களை பிரயோகிக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்