பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் இன்று புதன்கிழமை (04) மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்  கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் பதவியை ஏற்ற தனது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்