ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பாக வைத்தியர்களுடனான மீளாய்வு கூட்டம்

 

அபு அலா

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பாக, ஆயுர்வேத வைத்தியர்களுடனான மீளாய்வுக்கூட்டம் கடந்த புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலின் ஏற்பாட்டில் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த மீளாய்வுக்கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த மீளாய்வுக்கூட்டத்துக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி இ.ஸ்ரீதர் ஆகியோரின் பங்கேற்புடன் இந்த மீளாய்வுக்கூட்டம் இடம்பெற்றது.

ஆயுர்வேத வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் நேரடியாக கேட்டறிந்து கொண்டதுடன் ஆயுர்வேத வைத்தியத்துறையை மக்கள் மயமாக்கி அதனூடாக ஆயுர்வேத உற்பத்திகளை அதிகரிப்பதற்கும் மக்களுக்கு ஆயுர்வேதத்துறை மீதான நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன் பாரம்பரிய மருத்துவம் பற்றிய ஆய்வுகளை செய்வதற்கு முன்வரவேண்டும் என குறித்த மீளாய்வு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கல்முனை பிராந்தியத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்கசர் மற்றும் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்