வைத்தியர் றிஸ்மியா ரபீக் எழுதி உள்ள அறிவும் ஆரோக்கியமும் நூல் வெளியீடு!

 

அபு அலா –

நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் திருமதி ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய ‘அறிவும் ஆரோக்கியமும்’ என்ற நூல் வெளியிட்டு விழா கடந்த புதன்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீPதர் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கும், இரண்டாம் பிரதியை கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளருக்கும் நூலாசிரியர் வழங்கி வைத்தார்.

இந்நூல் வெளியீட்டு விழாவுக்கு ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர்கள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு திருமதி ஆர்.எப்.றிஸ்மியா எழுதிய ‘அறிவும் ஆரோக்கியமும்’ என்ற நூலின் பிரதிகளை அதிதிகளால் பெற்றுக்கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.