கொழும்பில் கார் மோதியதில் படுகாயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இவ்விபத்தினை ஏற்படுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.