நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தகோரும் கோரிக்கை மனு ஐ.நா. அலுவலகத்தில் கையளிப்பு!

 

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துமாறு அமைந்த கோரிக்கை மனுவை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் சிறிதரன் எம்.பி. கையளித்தார்.

இலங்கைத் தீவில் நீதித்துறை மீது அரச நிர்வாகத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வகை நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கோரி கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றிருந்தது.

இந்த விடயம் தொடர்பான கோரிக்கை மனுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரனியோ குட்ரெஸுக்கு அனுப்பிவைப்பதற்கு ஏதுவாக, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ஸிடம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதன்கிழமை மனுவை சிறிதரன் எம்.பி. கையளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.