ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்பாக செயற்படும் – ஜனாதிபதி

ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உயரிய அந்தஸ்த்தை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்பாக செயற்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (06) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போதுள்ள சவால்களை எதிர்கொண்டு பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்காக போராடும் நாட்டிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் அதேநேரம், ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, சமூகத்தில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உயரிய அந்தஸ்த்தை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்பாக செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்