மலேசியாவில் இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கு பணவிவகாரமே காரணம் என்கிறது மலேசிய பொலிஸ்!
மலேசியாவின் சென்டிலில் இலங்கையர் மூவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணவிவகாரம் உள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முடிவடைந்துள்ளது நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக்குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக நகரபொலிஸ் தலைமை ஆணையாளர் டட்டுக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட ஒருவரின் பெற்றோர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் உள்ளனர் பணவிவகாரமும் கடன் விவகாரமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 22 ஆம் திகதி சென்டில் உள்ள வீடொன்றில் மூவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களும் உரிமையாளரும் மகனுமே சடலமாக மீட்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை