அல்-அஸ்ரப் மஹா வித்தி சர்வதேச சிறுவர் தினம்!

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட காரைதீவுக் கோட்ட கமுஃகமுஃமாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மஹா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச சிறுவர் தினம் வெகு விமர்சியாக அதிபர் வீ. முஹம்மட் ஸம்ஸம் தலைமையில் கல்லூரியின் முகாமைத்துவக் குழுவினரின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் மௌலவி ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் (ஹாமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

மேலும் கல்லூரியின் பிரதியதிபர்கள், உதவியதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

மாணவர்களின் பலதரப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர் தினத்தினையொட்டியதான பாடலை ஆங்கில பாட ஆசிரியை திருமதி எஸ்.எஸ். ஆயிஷா பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.

இந்நிகழ்வின் போது அனைவருக்கும் ஐஸ்கிரீம், பழம், கேக் மற்றும் நினைவுப் பரிசில்களும் கல்லூரியின் கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வதேச சிறுவர் தின சிறப்புரைகளை அதிபர் வீ.எம்
ஸம்ஸம், பிரதி அதிபர் ஏ. எல். ரஜாப்தீன் , பிரதம அதிதி ஏ. எல்.எம். ஜாகங்கீர் ஆகியோர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், பிரதி அதிபர் மௌலவி. எம்.சி.எம்.தஸ்தகீரால் நிகழ்வுகள் யாவும் தொகுத்து வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்