நுவரெலியா – ஹக்கலயில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம்  காயமடைந்த நிலையில்  நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி லொறியின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம்  பல வீதித்தடைகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.