மன்னாரில் கடற்றொழிலாளர்களின் வலையில் சிக்கிய அபூர்வ பாம்புமீன்

மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.

சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.

பெரும்பாலும் இவ்வகை மீன்கள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.

அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும்.

ஆனாலும் சனிக்கிழமை பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இந்த வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு, உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.