நடிகர் ஜாக்சன் ஆண்டனியின் இறுதி கிரியைகள் வியாழன்

இன்று அதிகாலை காலமான பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனியின் இறுதிக் கிரியை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஜாக்சன் ஆண்டனியின் பூதவுடல் நாளை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் ராகமவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தில் வைக்கப்படும்.

வியாழன் பிற்பகல் 3 மணியளவில் ராகமவில் உள்ள புனித பீட்டர் ரூ பால் தேவாலயத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ஜாக்சன் ஆண்டனி தனது 65ஆவது வயதில் காலமானார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்