டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்  வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குருணாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் இடம்பெற்றுள்ளது.

45 வயதுடைய பொல்கஹவெல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

நேற்று திங்கட்கிழமை (09) இரவு இந்த கான்ஸ்டபிள் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்தபோது, கந்தளாயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர்  மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்